கங்கை நீர் மாசுபட்டுள்ள பகுதியில் ஏன் எச்சரிக்கை வாசக பலகைகள் வைக்ககூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிகரேட் பெட்டி, மதுப்பான பாட்டில்கள் மேல் "உடல் நலத்திற்கு தீங்கு" என வாசகங்கள் பொறிக்கப்பட்டு இருப்பது போல் ஏன் கங்கை நீர் மாசுபட்டுள்ள பகுதியில் எச்சரிக்கை வாசகம் வைக்ககூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்துவார்-உன்னாவோ பகுதிகளுக்கு இடையே கங்கை நீர் குடிப்பதற்கோ குளிப்பதற்கோ தகுதியற்றதாக இருப்பதாக தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
 
மேலும், கங்கை நீர் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் தகுதியுடையதா என்பதை தெரிவிக்கும் வகையில், 100 கிலோமீட்டர் இடைவெளியில், கங்கை நீரின் தரத்தினை குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.



கங்கையில் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் ஏற்ற பகுதிகள் எவை என்பதை, வரைபடத்தில் குறித்து இணையதளத்தில் பதிவேற்றுமாறும், கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 


கங்கை புனிதம் என்று, நீரில் இருக்கும் மாசுவினை பொருட்படுத்தாமல் மக்கள் பயன்படுத்துவது அவர்களின் உடல் நலத்திற்கு கேடு விலைவிக்கும் என்று நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது!