ஆந்திர அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்!!
மணல் கொள்ளை தொடர்பாக ஆந்திர மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ளது.
மணல் கொள்ளை தொடர்பாக ஆந்திர மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ளது.
ஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. விஜயவாடாவில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டின் அருகே மணல் கொள்ளை நடப்பதாகவும், இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் ராஜேந்திர சிங் மற்றும் அனுமோலு காந்தி ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஆந்திர மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.