‘பாஸ்டேக்’ வழியில் தவறுதலாக வரும் வாகனங்களுக்கு இந்தியா முழுவதும் இதுவரை 18 லட்சம் வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.20 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கக்கட்டணம் செலுத்துவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்கவே இந்த FASTag முறை கொண்டுவரப்பட்டது. காரின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படும் ஒரு சிறிய சிப் மூலம் நாம் செலுத்தவேண்டிய தொகை தானாகவே நமது வங்கி கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். எனவே மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க முடியும் என்றும் கூறிய மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தியது.


இந்நிலையில்  ‘பாஸ்டேக்’ வழியில் தவறுதலாக வரும் வாகனங்களுக்கு அபராதமாக இருமடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி இந்தியா முழுவதும் இதுவரை 18 லட்சம் வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.20 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.