நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம்!
நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது!!
நிர்பயா வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது!!
டெல்லி: டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் கடந்த 1 ஆம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் சட்டரீதியான தடை ஏற்பட்டது.
இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். அதனை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் சர்மா, தனது வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கருணை மனுவை ஜனாதிபதி நிராகரிக்கும் போது, சமூக விசாரணை அறிக்கை, மருத்துவ நிலை அறிக்கை மற்றும் குற்றச்செயலில் மனுதாரர் வினய் சர்மாவின் பங்கு ஆகியவை கவனத்தில் கொள்ளப்படவில்லை என மனுதாரரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் வாதிட்டார்.
இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால், வினய் சர்மாவின் மரண தண்டனை மீண்டும் உறுதியாகி உள்ளது.