நிர்பயா வழக்கில் நாளை தூக்கிலிடப்படவுள்ள நிலையில் குற்றவாளியான பவன் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை  உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிர்பயா வழக்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வரையும் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிட தேதி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து கருணை மனு மற்றும் சீராய்வு மனுக்களை குற்றவாளிகள் ஒவ்வொருவராக தாக்கல் செய்தனர். இதன் காரணமாக அவர்களது தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


இதையடுத்து, நான்கு பேரையும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா உத்தரவிட்டார். 


இதற்கிடையே, நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குமார் உச்சநீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார். அந்தவகையில் நிர்பயா வழக்கு குற்றவாளியான பவன் குமாரின் சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் மார்ச் 2ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்து 'இருந்தது. 


இந்நிலையில் நிர்பயா வழக்கில் நாளை தூக்கிலிடப்படவுள்ள நிலையில் குற்றவாளியான பவன் தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை  உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் 4 குற்றவாளிகளுக்கும் நாளை மரண தண்டனையை நிறைவேற்ற ஏற்கனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.