புதுடெல்லி: வங்கிகளை இணைப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை இணைக்கப்படுகின்றன என்று கூறினார். இந்த இணைப்பிற்குப் பிறகு, நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இது மாறும், 17.95 லட்சம் கோடி வர்த்தகம் ஏற்ப்படும் எனவும் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது, 


பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைட்டட் வங்கி ஒன்றாக இணைக்க முடிவு. இதன் மூலம் ரூ.17.95 லட்சம் கோடி வர்த்தகத்துடன் இது நாட்டின் 2வது பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும்.


கனரா வங்கியுடன், சிண்டிகேட் வங்கி இணைக்கப்படும்; இதன் மூலம் 15.20 லட்சம் கோடி வர்த்தகத்துடன் நாட்டின் 4வது பெரிய பொதுத்துறை வங்கியாக உருவெடுக்கும்.


யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் ஒன்றாக இணைக்கப்படும். இது நாட்டின் 5வது பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும்.


இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படும். இதன் மூலம் 8.08 லட்சம் கோடி வர்த்தகத்துடன் நாட்டின் 7வது பெரிய பொதுத்துறை வங்கியாக உருவெடுக்கும். 


2017ல் இந்தியாவில் 27 வங்கியாக இருந்தது. தற்போது அது 12 வங்கியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் செலவினங்களை குறைக்கவும், அதிக அளவில் வங்கி சேவையை அளிக்கவும் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. மேலும் வங்கி மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.