புலம்பெயர்ந்தோருக்கு அடுத்த 2 மாதத்திற்கு இலவச உணவு தானிய விநியோகம்...
அடுத்த இரண்டு மாதங்களுக்கு புலம்பெயர்ந்தோருக்கு இலவச உணவு தானிய விநியோகம் வழங்கப்படும் என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு புலம்பெயர்ந்தோருக்கு இலவச உணவு தானிய விநியோகம் வழங்கப்படும் என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கட்டுப்படுத்த மெகா பொருளாதார தொகுப்பு குறித்த அறிவிப்புகளின் இரண்டாவது கட்டத்தில் இந்த அறிவிப்பினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார்.
ஒரு நாடு -ஒரு ரேஷன் கார்டு முறையும் அறிமுகப்படுத்தப்படும் எனவும், இது ஆகஸ்ட் 2020-க்குள் 23 மாநிலங்களில் 67 கோடி பயனாளிகளுக்கு பயனளிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை எட்டு கோடி புலம்பெயர்ந்தோருக்கு உதவும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மேலும் புலம்பெயர்ந்தோர் இருக்கும் இடத்தில் மாநில பயனாளி அட்டைகள் இல்லாத புலம்பெயர்ந்தோருக்கு தலா ஐந்து கிலோ கோதுமை மற்றும் அரிசி, மற்றும் ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு ஒரு கிலோ கடலை பருப்பு கிடைக்கும் எனவும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதற்காக ரூ .3,500 கோடியை அரசு ஏற்கும் என்று சீதாராமன் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்தோருக்கான மளிவு வாடகை வீட்டு வளாகங்களுக்கான திட்டத்தையும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதில், தற்போதுள்ள அரசு நிதியளிக்கும் வீடுகளையும் பொது-தனியார் கூட்டு அடிப்படையில் சேர்க்கலாம் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் மற்றும் அதன் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பிரிவுகளை ஆதரிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு விவரங்களை பகிர்ந்து கொள்ள அமைச்சர் நிர்மலா சித்தராமன் மேற்கொண்ட இரண்டாவது நேரடி சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.