அரசு செலுத்த வேண்டிய கட்டணம் எதுவும் நிலுவையில் இருக்க கூடாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: சரக்கு மற்றும் சேவைகளுக்காக சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசு துறைகள் உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், வளர்ச்சியை அதிகரிக்க செலவினங்களை விரைவுபடுத்துமாறு நிர்மலா சீதாராமன் அமைச்சர்களை கேட்டுக்கொண்டுள்ளார். 


தனியார் துறை வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுடனான தனது “டானிக் போன்ற” சந்திப்புக்கு பின்னர், பணப்புழக்க பிரச்சினைகள் குறித்து யாரும் பேசுவதைக் கேட்கவில்லை என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை அரசாங்கத் துறைகளுக்கு எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைத் தொகையும் திருப்பித் தருமாறு வலியுறுத்தினார். பொருளாதார மந்த நிலையை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக நேற்று முக்கிய அமைச்சக செயலாளர்கள் மற்றும் நிதி ஆலோசகர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களிடம் பணம் தாராளமாக புழங்க வேண்டும் என்றும், குறிப்பாக மத்திய அரசு துறைகளுக்கு சரக்குகளும் சேவைகளும் வழங்கிய சிறு குறு நிறுவனங்களின் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.


இதுவரை நிலுவையில் இருந்த 60 ஆயிரம் கோடி ரூபாயில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டு விட்டது என்றும் தெரிவித்த நிர்மலா சீதாராமன், மீதமுள்ள 20 ஆயிரம் கோடி ரூபாயை அக்டோபர் மாதத்தில் வழங்குமாறு அனைத்து அரசுத் துறைகளிடமும் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்தார்.