பிஸ் தரவரிசையை மேம்படுத்த இந்தியாவுக்கு உதவும் வகையில் ஜி.எஸ்.டி எளிமைப்படுவதாக சீதாராமன் உறுதியளித்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சரக்கு-சேவை வரி (GST) நடைமுறைகள் மேலும் எளிமையாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள நாடுகளின் 2020-ஆம் ஆண்டுக்கான பட்டியலை உலக வங்கி வியாழக்கிழமை வெளியிட்டது. இதில், 14 இடங்கள் முன்னேற்றம் கண்டு 63-ஆவது இடத்தை இந்தியா பிடித்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்; மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) எளிமையாக்கியதன் மூலம் எளிதாக வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது. திவால் குறியீடு அமல்படுத்தப்படுவதும் எளிதான வர்த்தகம் பட்டியலில் இந்தியாவை முன்னேற்ற உதவியது. ஜி.எஸ்.டி. மேலும் எளிமையாக்கப்படும். ஆன்லைன் கணக்கு தாக்கலில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


இந்த பட்டியல் தற்போது மும்பை, டெல்லியை மட்டும் கணக்கில் கொண்டு எடுக்கப்படுகிறது. இதில் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவை சேர்க்க வேண்டும் என்று கூறியதை உலக வங்கி ஏற்றுக் கொண்டது. இப்போதைக்கு எங்களது நோக்கம் இந்த பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா இடம்பெற வேண்டும் என்பதே. முன்னேறிவரும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து 3-வது ஆண்டாக முதல் 10 நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்தியா 7-வது இடத்தில் உள்ளது. இது மிகப்பெரிய முன்னேற்றம். வர்த்தகம் தொடங்குவதில் நாம் ஒரு இடம் மட்டுமே முன்னேறி உள்ளோம்.


எளிதான வர்த்தகம் பட்டியலில் இந்தியா முன்னேற மாநில அரசுகளும் வர்த்தக சூழ்நிலையை அதிகரிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். குறிப்பாக நிலம், வீடு போன்ற சொத்துகள் பத்திரப்பதிவை அதிகரிக்க வேண்டும். திவால் பிரச்சினைக்கு தீர்வு, கட்டுமான அனுமதி, எல்லை தாண்டிய வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.