மோடியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது சரியல்ல -நிர்மலா சீதாராமன்!
மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மாயவதி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மாயவதி விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
முன்னதாக பிரதமர் மோடி குறித்தும், பாஜக கட்சியை சேர்ந்த பெண்கள் குறித்தும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேசிய கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆல்வார் பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாயாவதி, தனது அரசியல் ஆதாயத்திற்காக சொந்த மனைவியை பிரிந்தவர் மோடி. சொந்த மனைவியையே பிரிந்தவர் எப்படி மற்றவர்களின் சகோதரிகள் மற்றும் மனைவிகளை மதிப்பார்?
பாஜக-வில் உள்ள திருமணமான பெண்கள் தங்களின் கணவர்கள் மோடியை சந்தித்தால், மோடியை போல் மனைவியை தனியாக தவிக்க விட்டு சென்று விடுவார்களோ என பயப்படுகிறார்கள் என சர்ச்சைக்குறிய விதத்தில் பேசியிருந்தார்.
இதற்கு தற்போது பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்., "பிரதமர் குறித்தும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், பாஜக-வை சேர்ந்த பெண்கள் குறித்தும் மாயாவதி பேசிய உள்ள கருத்து உண்மையில் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
சகோதரி மாயாவதி அவர்களே, நாங்கள் உண்மையிலேயே மிகவும் பாதுகாப்பாக உள்ளோம் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். எங்களது கட்சியில் நல்ல ஒருங்கிணைந்த நட்புறவு உள்ளது என்பதையும், பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.