#NITI Aayog-வரலாற்று மாற்றத்தை கொண்டு வரும்: மோடி பேச்சு!
பிரதமர் மோடி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நிதி ஆயோக் கூட்டம் நடந்து வருகிறது!
மத்திய திட்டக் கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பை பிரதமர் மோடி ஏற்படுத்தினார். இந்த அமைப்பின் நான்காவது நிர்வாக கவுன்சில் கூட்டம் டெல்லி ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி தலைமையில் துவங்கியுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை கவர்னர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நிதி ஆயோக் நிர்வாகக்குழு வரலாற்று மாற்றத்தை கொண்டுவரக் கூடிய வகையில் இருக்கும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாதித்த மாநிலங்களுக்கு தேவையான உதவியை மத்திய அரசு செய்யும். ஒத்துழைப்பு மற்றும் துடிப்பு மிகுந்த கூட்டாட்சி நிர்வாகத்தில் உள்ள முக்கிய பிரச்னைகளை நிடி ஆயோக், கவுன்சில், 'டீம் இந்தியா' என்ற வகையில் அணுகியது. இதற்கு ஜிஎஸ்டி சமூகமாக அமல்படுத்தப்பட்டது உதாரணமாக உள்ளது. ஒத்துழைப்பு, கூட்டாட்சி முறை ஆகியவை வளர்ச்சிக்கு முக்கியம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.