பீகார் மாநிலத்தில் புதிய முதல் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற நிதிஷ்குமார் சட்டசபையில் இரண்டு நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனவே இன்று பீகார் மாநில சட்டசபையில் தன் பலத்தை நிரூபிக்க சிறப்பு கூட்டத்தை நடத்துகிறார் நிதிஷ்குமார். பீகார் மாநில சட்டசபையில் 243 தொகுதிகள் உள்ளன. தங்கள் பெரும்பான்மை நிருபிக்க 123 தொகுதிகள் தேவை.


தற்போது ஐக்கிய ஜனதா தளம்+பா.ஜ.வுக்கு, 124 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். மேலும் 3 சுயேச்சைகளும், பா.ஜ., கூட்டணிக் கட்சி சார்பில் 5 பேரும் என மொத்தம் 132 எம்.எல்.ஏ.,க்கள் என தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு உள்ளது. 


எனவே இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றி பெறும் என தெரிகிறது.