நிதீஷ் குமாரின் ஆட்சி நீடிக்காது :தேஜஷ்வி யாதவ்
பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஷ்வி யாதவ், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் குறித்து பல கருத்துகளை முன்வைத்துள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது நிதீஷ் குமாரின் தற்போதைய அரசாங்கத்தை மிக விரைவில் கலைக்கப்படும், மேலும் அவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வதில் தோல்வி அடைவார் என்றும் கூறினார். நிதீஷ் எங்களுடன் பணியாற்ற விரும்பவில்லை என்றால், அவர் ஏன் இத்தனை காலம் காத்திருந்தார்?என கேள்வி எழுப்பினர்.
மேலும் பனாமா பேப்பர்ஸ் கசிவு வழக்கில் பெயரிடப்பட்ட நபர்கள் அனைவருக்கும் எதிராக விசாரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் வைத்தாரா? என கேட்டுள்ளார்.
பீகார் மக்கள் நிர்பந்திக்கும் அனைத்து கேள்விகளுக்கும் நிதீஷ் குமார் மற்றும் சுஷில் மோடி ஆகியோர் பதில் கூறவேண்டும். பனாமா பேப்பர்ஸ் கசிவு வழக்கில் பெயரிடப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக விசாரணை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நோட்டீஷ் வேண்டுகோள் விடுக்க வேண்டும். இதெல்லாம் நடக்குமா?, ஒருபோதும் நடக்க விட மாட்டார்கள், அரசாங்கத்தின் 75 சதவீத மந்திரிகள் கறைபடிந்தவர்கள் என்று தேஜாஷ்வி குற்றம்சாட்டினர்.
இத்தகைய ஆட்சி பீகாரில் நீடிக்க வாய்ப்பு இல்லை எனவே விரைவில் நிதீஷ் குமாரின் ஆட்சி முடிவுக்கு வரும் என் அவர் தெரிவித்தார்.