முகமூடிகளை கட்டாயமாக்குவதற்கான ஒடிசா அரசாங்கத்தின் நடவடிக்கையை ஆதரிக்கும் முயற்சியாக, ஒடிசாவின் முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து பெட்ரோல் பம்புகளும் முகமூடி அணியாத எவருக்கும் பெட்ரோல் வழங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வியாழக்கிழமை காலை முதல் இந்த நடைமுறை ஒடிசாவில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. மற்றும் இந்த நடைமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


அதன்படி விதி மீறுபவர்களுக்கு அபராதம் முதல் 3 முறைக்கு ரூ.200-ஆகவும், அடுத்தடுத்த ஒவ்வொரு மீறலுக்கும் ரூ.500-ஆகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து உத்கல் பெட்ரோலிய விநியோகஸ்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சஞ்சய் லாத் கூறுகையில், எரிபொருள் நிலையங்களின் ஊழியர்களும் தங்கள் வேலைகளுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து வருகிறார்கள், எனவே அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. “அரசாங்கத்தின் முடிவு பொதுமக்களின் நலனுக்காகவே, நாங்கள் அதை முழுமையாக ஆதரிக்கிறோம். அதன்படி, வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வை மனதில் வைத்து, நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்,” என தெரிவித்துள்ளார்.


ஒடிசாவை பொறுத்தவரையில் இதுவரை 48 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் தற்போது 45 வழக்குகள் செயல்பாட்டில் உள்ளது, இருவர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர் மற்றும் ஒருவர் கொரோனாவிற்கு தனது உயிரை பலி கொடுத்துள்ளார்.


மாநிலத்தில் அதிகரித்து வரும் கோரோனா தொற்றை தடுக்கும் விதமாக தேசிய முழு அடைப்புடன், மாநிலத்தில் முழு அடைப்பினை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா முழு அடைப்பை நீட்டித்த முதல் மாநிலமானது. ஒடிசாவை தொடர்ந்து அமரேந்திர சிங் தலைமையிலான பஞ்சாப் அரசும் தங்கள் மாநிலத்தில் முழு அடைப்பை வரும் மே 1-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.