புதுடில்லி: கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கேக்கில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அந்த உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்கிறார். அப்பொழுது இரு நாட்டு பிரதமர்களும் நல்லெண்ண அடிப்படையில் சந்தித்து பேசுவார்கள் என்ற தகவல் வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் மோடி மற்றும் இம்ரான் கான் சந்திப்பார்கள் என்று வெளியான தகவல் உண்மை இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளரான ரவீஷ் குமார் கூறியது, 


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்திய பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் சந்திப்பதற்க்கான எந்த திட்டமும் இல்லை. அதேபோல இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலரான சொஹைல் மஹ்மூத், அவரின் சொந்த காரணங்களுக்கான வந்துள்ளார். அதனால் இந்திய அதிகாரிகள் யாரும் அவரை சந்தித்து பேச வாய்ப்பில்லை எனக்கூறினார்.


நாட்டின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்த முடிவு எடுக்கப்படும். நாளை மறுநாள் பூட்டான் நாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் கூறினார்.