குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு-க்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு(NPR)-க்கு எதிராக மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1), மாநில சட்டசபையில் CAA மற்றும் NPR-க்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.


CAA மற்றும் NPR குடியுரிமையை பறிக்காது என்றும் பீகார் சட்டமன்றத்தில் செய்யப்பட்டதைப் போலவே CAA மற்றும் NPR-க்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது தேவையற்றது என்றும் பவார் வலியுறுத்தினார். CAA மற்றும் NPR குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்றும், இந்த விஷயங்கள் குறித்து அனைவரும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் NCP தலைவர் கூறினார்.


முன்னதாக, பிப்ரவரி 21-ஆம் தேதி, மகாராஷ்டிரா அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான அசோக் சவான், CAA மற்றும் NPR குறித்து சிவசேனாவின் நிலைப்பாடு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், இந்த விவகாரம் மகாராஷ்டிரா ஒருங்கிணைப்புக் குழுவால் எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.


அந்தவகையில்., "மகாராஷ்டிராவில் மூன்று கட்சி கூட்டணி அரசு உள்ளது. காங்கிரஸ் கட்சி CAA, NPR மற்றும் NRC மீதான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இது நாட்டின் நலனுக்காக அல்ல. CAA, NPR மற்றும் NRC-ல் சிவசேனாவின் நிலைபாடு இன்னும் தெளிவாக இல்லை என்று தெரிகிறது" என்று சவான் ANI இடம் தெரிவித்திருந்தார்.


சிவசேனா, காங்கிரஸ் மற்றும் NCP ஆகியவை மகாராஷ்டிராவில் கூட்டணி அரசாங்கத்தை நடத்தி வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மகாராஷ்டிரா முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் CAA மற்றும் NPR-க்கு எதிராக மாநில சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் கூறியிருந்தன. இந்நிலையில் தற்போது துணை முதல்வர் தரப்பில் இருந்து இவ்வாறான கருத்து வெளிப்பட்டுள்ளது.