புதிய ரூ.1000 நோட்டு இப்போதைக்கு இல்லை: சக்திகாந்த தாஸ்
புதிய 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
புதுடெல்லி: புதிய 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து, மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறுகையில்:-
புதிய 1000 ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. புதிய ரூ.500 நோட்டுக்கள் உள்ளிட்ட குறைந்த மதிப்புடைய நோட்டுக்களை அதிகம் அச்சிட்டு, புழக்கத்தில் விடும் பணி நடந்து வருகிறது.
ஏடிஎம்.,க்களில் இன்னுமும் பண தட்டுப்பாடு நிலவுவதாக புகார் வருகிறது. தேவையான பணத்தை மட்டும் ஏடிஎம்.,ல் இருந்து எடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.