காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்முவையும் காஷ்மீரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை ஆகும். 


இந்த சுரங்கப்பாதையால் வாகன ஓட்டிகளுக்கு 2 மணி நேரம் மிச்சமாகும். ஆண்டுக்கு ரூ.99 கோடி மதிப்பிலான எரிபொருளும் சேமிக்கப்படும். ரூ.3,700 கோடி செலவில், பல தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. 


இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசியதாவது:-


இந்த சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்த கட்காரி மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகள் தெரிவித்து கொள்கிறேன். இந்த பாதை இமயமலையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும். சிலர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கல்வீச இளைஞர்களை தவறாக வழிநடத்துகின்றனர். மற்றொரு புறத்தில், வளர்ச்சிக்கு கற்களை வெட்டினர். இந்த சுரங்க பாதைக்கு இளைஞர்கள் 1000 நாட்கள் கற்களை வெட்டினர்.


பயங்கரவாத்தால் எவரும் லாபம் அடைந்தது இல்லை. அது காஷ்மீரில் இரத்தம் செய்யப்பட்டது.


இவ்வாறு அவர் பேசினார். 


மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட காஷ்மீர் முதல்வர் மெகபூபா, உ.பி., தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார்.