மின்சாரம் இல்லையா? வாட்ஸ்ஆப்-ல் புகார் செய்தால் போதும்!
![மின்சாரம் இல்லையா? வாட்ஸ்ஆப்-ல் புகார் செய்தால் போதும்! மின்சாரம் இல்லையா? வாட்ஸ்ஆப்-ல் புகார் செய்தால் போதும்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/08/28/118338-relaince-whatapp.jpg?itok=7YBfsbIL)
ரிலையன்ஸ் எரிசக்தி நிறுவனம், மின்வழங்கல், விநியோகம் மற்றும் மறுசீரமைப்பை பிரச்சனை பிரச்சனைகளை சரிசெய்வதற்கான வாட்ஸ்ஆப் எண் ஒன்றை தனது நுகர்வோர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
மும்பை: ரிலையன்ஸ் எரிசக்தி நிறுவனம், மின்வழங்கல், விநியோகம் மற்றும் மறுசீரமைப்பை பிரச்சனை பிரச்சனைகளை சரிசெய்வதற்கான வாட்ஸ்ஆப் எண் ஒன்றை தனது நுகர்வோர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி வாடிக்கையாளர்கள் இப்போது இந்த சிறப்பு வாட்ஸ்ஆப் எண் மூலம் புகார்களை பதிவு செய்தல் மற்றும் புகாரின் நிலைமைகளை சரிபார்க்க முடியும்.
இதற்க்கு வாடிக்கையாளர்கள் #NOPOWER(தங்கள் கணக்கின் எண்) 9022813030 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும். அனுப்பியபின் புகார் விவரங்களை அனுப்பியதற்கான தானியங்கு பதிலைப் உடனடியாக் பெறுவார்கள்.
வாட்ஸ்ஆப் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் தொடர்பு கருவிகளில் ஒன்றாகும் என்பதால், பெரும்பான்மையான சேவைகள் இந்த செயலி மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருவது வரவேற்கதக்கது என பலர் கருத்து தெரிவிதுள்ளனர்.