இது சற்று விசித்திரமானதாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், இப்போது கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கோவிட் மருத்துவமனைகளில் மலேரியாவுக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு பதிலாக ஃபைலேரியாசிஸ் (Filariasis) மற்றும் அரிப்புக்கு (Itching) வழங்கப்படும் ஐவர்மெக்டின் (Ivermectin) மருந்து கொடுக்கப்படும். கொரோனா சிகிச்சை (Corona Treatment) மற்றும் தடுப்பு ஆகியவற்றிலும் இந்த மருந்து பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். உத்திர பிரதேச (Uttar Pradesh) சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர், அமித் மோகன் பிரசாத், சி.எம்.ஓ டாக்டர் தீபக் ஒஹ்ரிக்கு, கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதிக்கப்பட்டவர்களுடன், கடமையைச் செய்யும் சுகாதார ஊழியர்களுக்கும் இந்த மருந்து மாதத்திற்கு மூன்று நாட்கள் வழங்கப்படும். இருப்பினும், இந்த மருந்து கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படாது. இது அவர்களுக்கு ஆபத்தானது என்று விவரிக்கப்பட்டுள்ளது.


குழந்தை பிஜிஐ செய்தித் தொடர்பாளரும் மூத்த அவசர நிலை அதிகாரியுமான டாக்டர் மேஜர் பிபி சிங் கூறுகையில், ஐவர்மெக்டின் மருந்து ஆஸ்திரேலியாவில் பரிசோதிக்கப்பட்டது. இந்த மருந்து ஆய்வகத்தில் வைரஸின் மீது பயன்படுத்தப்பட்டது. முடிவுகள் நேர்மறையாக வந்தன என்று கூறினார். இந்த மருந்து மூலம் கொரோனாவை குணப்படுத்துவதற்கான வழிகளை பல நாடுகள் தேடிக்கொண்டிருந்தன. 48 மணி நேரத்திற்குள் ஐவர்மெக்டின் 5000 மடங்கு வேகமாக வைரஸைக் கொல்லும் திறன் கொண்டது என்பது ஆராய்ச்சியின் போது தெரியவந்துள்ளது.


இந்த மருந்து நாட்டில் போதுமான அளவில் உள்ளது. இது ஒரு பூஞ்சை எதிர்ப்பு மற்றும் புழு எதிர்ப்பு மருந்தாகும். ஐவர்மெக்டின் 12 எம்ஜி-யின் இரண்டு மாத்திரைகள் சந்தையில் 25 முதல் 30 ரூபாய்க்குக் கிடைக்கும். இந்த மருந்தை ஒரு மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.


 ஃபைலேரியாசிஸ் நோயில், யானைகளின் கால்களைப் போலவே கைகளும் கால்களும் வீங்கிக்கொள்ளும். ஆகையால் இது யானைக்கால் என்று அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், ஃபைலேரியாவிற்கான மாதிரி இரவு 10 மணி முதல் மதியம் 2 மணி வரை எடுக்கப்படுகிறது. ஏனெனில் பகலில் ஒட்டுண்ணி உடல் லிம்பாய்டில் மறைந்திருக்கிறது. இது இரவு 10 மணிக்குப் பிறகு இரத்தத்தில் சுழலும். இந்த நேரத்தில் ரத்தம் எடுக்கப்பட்டு ஆய்வுக்குஅனுப்பப்படுகிறது.


ALSO READ: குடிப்பழக்கத்திற்கு சிகிச்சையளிக்கும் மருந்து கொரோனாவை குணப்படுத்தும்: ஆய்வு!


வைரஸின் அறிகுறிகள் இல்லாத கொரோனா (Corona) நோயாளிகளுடன் தொடர்பு கொள்ளும் நபர்கள், இரவு உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு முதல் நாள் மற்றும் ஏழாம் நாள் ஐவர்மெக்ட்டின் எடுத்துக்கொள்ள வேண்டும்.


கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், அவர்களது சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கும் இது வழங்கப்படும். சுகாதார பணியாளர்கள் முதல் நாள், ஏழாம் நாள் மற்றும் மாதத்தின் கடைசி நாளில் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழியில், அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும்.


கொரோனா நோயாளிகளுக்கு இந்த வகையில் மருந்து வழங்கப்படும். எல் -1, எல் -2 மற்றும் எல் -3 ஆகிய மூன்று பிரிவுகளின் நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்படும். சிகிச்சையின் முதல் மூன்று நாட்களுக்கு, நோயாளிகள் இரவு உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மருந்து எடுத்துக்கொள்வார்கள். இதனுடன் நோயாளிகளுக்கு ஆன்டி-பயோடிக் டாக்ஸிசைக்ளின் 100 mg இரண்டு முறை தொடர்ச்சியாக ஐந்து நாட்களுக்கு வழங்கப்படும்.


உ.பி. முதல்வர் அலுவலகத்தின் டாக்டர் தீபக் ஓஹ்ரி கூறுகையில், அரசாங்க உத்தரவு பெறப்பட்டுள்ளது என்றும், மலேரியா மருந்துக்கு பதிலாக, இப்போது கொரோனா நோயாளிகளுக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் ஐவர்மெக்ட்டின் மருந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


ALSO READ: COVID-19 அறிகுறி தெரிய 8 நாட்கள் வரை ஆகலாம்... பகீர் கிளப்பும் ஆய்வாளர்கள்!!