புதுடெல்லி: முக்கிய துறைமுக நகரமான கொச்சி முழுவதும் சைக்கிள்களின் பயன்பாடு அதிகரித்ததை அடுத்து, கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் (KMRL), இனி பயணிகள் தங்கள் சைக்கிள்களை மெட்ரோ ரயிலுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்க முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாயன்று, கொச்சி மெட்ரோ அதிகாரிகள் சங்கம்பூஜா பூங்கா, பலாரவத்தம், டவுன்ஹால், எர்ணாகுளம் தெற்கு, மகாராஜா கல்லூரி, மற்றும் எலம்குளம் மெட்ரோ நிலையங்கள் உள்ளிட்ட ஆறு நிலையங்களில் முதலில் இந்த வசதி அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.



தற்போது, ​​சைக்கிள்களின் நுழைவு மற்றும் வெளியேறுதல் இந்த ஆறு நிலையங்களில் மட்டும் அனுமதிக்கப்படும். கொச்சி மெட்ரோ, சைக்கிள்களை மெட்ரோவில் (Metro) கொண்டு வரும் பயணிகளின் எண்ணிக்கையை பரிசீலிக்கும். இதற்கான தேவை அதிகமாக இருந்தால், அனைத்து நிலையங்களுக்கும் சேவை நீட்டிக்கப்படும்.


 கொச்சி (Kochi) மெட்ரோவின் கூடுதல் தலைமைச் செயலாளர் அல்கேஷ் குமார் சர்மா கூறுகையில், “மோட்டார் பொருத்தப்படாத போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும் மெட்ரோவுக்குள் சைக்கிள்களை அனுமதித்துள்ளோம். உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்கள் அறிவார்கள். இது மக்கள் தங்கள் அன்றாட பயணத்திற்கு சைக்கிள்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கும்” என்றார்.


சைக்கிள் ஓட்டுநர்கள் நிலையத்தில் லிஃப்ட்டை பயன்படுத்தலாம். ரயில்களில் நுழைவதற்கு ஊழியர்கள் வசதி செய்வார்கள். பயணிகள் தங்கள் சைக்கிளை ரயிலின் இரு முனைகளிலும் வைத்திருக்க முடியும். இதற்கிடையில், சைக்கிள் பயன்பாட்டை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக கொச்சி மெட்ரோ களமசேரியிலிருந்து கக்கநாடு வரை ஃபீடர் சேவையைத் தொடங்கியுள்ளது.


ALSO READ: 30 நிமிடம் மெட்ரோ நிறுத்தம், மக்கள் செய்த விசித்திரமான காரியம்!


களமசேரி மெட்ரோ நிலையத்திலிருந்து (Metro Station) கலெக்டரேட்டுக்கு இந்த சேவை கிடைக்கும். மெட்ரோ மற்றும் ஃபீடர் சேவைகளின் தடையற்ற இணைப்பைப் பயன்படுத்தி மக்கள் கக்கநாட்டில் உள்ள கலெக்டரேட்டுக்கு எளிதாக சென்று வரலாம்.


காலை 9:30 மணிக்கு களமசேரி மெட்ரோ நிலையத்திலிருந்து இந்த சேவை தொடங்கும். மாலை 5 மணிக்கு கக்கநாட்டில் இருந்து சேவை தொடங்கும்.


கொச்சி மெட்ரோ வைட்டிலா மெட்ரோ நிலையத்தில் ஆட்டோ ரிக்‌ஷா சேவையைத் தொடங்கியுள்ளது. மெட்ரோ பயணிகளின் நலனுக்காக வைட்டிலாவிலிருந்து 12 வழித்தடங்களை மெட்ரோ அடையாளம் கண்டுள்ளது.


ALSO READ: தமிழகத்தில் கொரோனாவை வென்று வீழ்த்திய முதல் மாவட்டமானது பெரம்பலூர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR