கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) அமல்படுத்துவது தொடர்பாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் கடும் தாக்குதலை நடத்தத் தொடங்கிவிட்டார். தன்னையும் வாக்களித்த வாக்காளர்களையும் அவமதிப்பதாக குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி,கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும்போது பேசிய டிஎம்சி தலைவர், “சில சமயங்களில் பொது மக்கள், இந்திய குடிமக்கள் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் அவர்கள் பொதுமக்கள் இல்லை என்றால், எப்படி வாக்களித்தார்கள்? எங்கள் வாக்குகளால் நீங்கள் பிரதமரானீர்கள், இன்று எங்களுக்கு குடியுரிமை வழங்குவதாகச் சொல்கிறீர்கள். இதற்கு என்ன பொருள்? இது எங்களை அவமதிக்க்கும் விஷயம் இல்லையா?" என்று மேற்கு வங்க முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) அமலாக்கத்தின் கீழ், தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காக, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இடம்பெறுவதை உறுதி செய்யுமாறு மேற்கு வங்க முதல்வர் மாநில மக்களை வலியுறுத்தினார்.


மேலும் படிக்க | டெல்லியை அடுத்து குஜராத்திலும் 12 பேரை சஸ்பெண்ட் செய்த பாஜக


அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒதுக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிலம் 'பட்டா' (பத்திரம்) வழங்கும் நிகழ்ச்சியில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார் மம்தா பேனர்ஜி.



"வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தவறு இருந்தால், பட்டியலில் இருந்து உங்கள் பெயர் விடுபட்டு, NRC என்ற பெயரில் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படலாம்” என்று அவர் எச்சரித்தார்.


"அஸ்ஸாமில் இதுபோன்ற நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. NRC என்பது, வெட்கம், அவமானம் மற்றும் அவமதிப்பு... ஒரு சதி நடக்கிறது. நேரத்தை வீணாக்காதீர்கள், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள்," என்று பானர்ஜி கூறினார்.


பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்த முதல்வர், நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுக்க தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியவர்கள், ஏன் "குடியுரிமைச் சான்றைக் கொடுக்க வேண்டும்" என்றும் கேள்வி எழுப்பினார்.


மேலும் படிக்க | கால்பந்து ரசிகர்களிடையே மோதல்! வீடியோவால் மாட்டிக் கொண்ட ரசிகர்கள்


கடந்த காலங்களில் "ரயில்வே மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தும்" சம்பவங்களைக் குறிப்பிடும் பானர்ஜி, "சரியான இழப்பீடு மற்றும் மறுவாழ்வு இல்லாமல் வங்காளத்தில் எந்த வெளியேற்றமும் அனுமதிக்கப்படாது" என்றார். மக்கள் தங்கள் நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டால் போராட்டங்களை நடத்துமாறு கேட்டுக்கொண்ட அவர், அந்த போராட்டத்திற்கு மாநில அரசு துணை நிற்கும் என்றும் உறுதியளித்தார்.


"ஏழை மக்களை வலுக்கட்டாயமாக ஒரு இடத்தில் இருந்து வெளியேற்ற முடியாது. மேம்பாலம் மற்றும் நெடுஞ்சாலை கட்டுமான பணிகளுக்காக சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். புல்டோசர்களை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அவ்வளவு எளிதில் விட்டுவிடாதீர்கள், போராட்டங்களை நடத்துங்கள்" என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார்.


“மாநிலத்தில் 300 அகதிகள் காலனிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம், அதன் குடியிருப்பாளர்களுக்கு சரியான நேரத்தில் நிலப் பட்டாக்கள் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார். தனது அரசின் ‘லக்ஷ்மிர் பந்தர்’ திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற பயனாளிகள் ஆதார் அட்டையை அளிக்க வேண்டியதில்லை என்றும் முதல்வர் கூறினார்.


மேலும் படிக்க | ஆன்லைன் மூலம் உங்கள் EPF கணக்கின் நாமினியை எளிதாக மாற்றலாம்


மேற்கு வங்கத்தில் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி மத்திய அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்படுவதாக கூறிய அவர், அது தொடர்பாக யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. 


"மேற்கு வங்கத்தில் பொருளாதார முற்றுகையை ஏற்படுத்தக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுபவர்களின் பெயர்களை சொல்வதில் நான் வெட்கப்படுகிறேன். மத்திய நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.


நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை கடுமையாக சாடிய அவர், "கட்சியின் (பாஜக) அறிவுறுத்தலின்படி மத்திய அரசு இயங்குகிறது" என்றார். "மத்திய அரசாங்கம் கட்சியிடமிருந்து அறிவுறுத்தல்களைப் பெறுகிறது. பகலை, இரவு என்று கட்சி கூறினால், அவர்களும் (மத்திய அரசு) ஆமாம் சாமி போடுகிறார்கள்" என்று அவர் மேலும் கூறினார்.


மேலும் படிக்க | தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ