அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தேசிய குடியுரிமைப் பதிவேடு நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை (நவம்பர் 20), மதத்தைப் பொருட்படுத்தாமல் இந்தியாவின் அனைத்து குடிமக்களும் தேசிய குடிமக்கள் பதிவு (NRC) பட்டியலில் இடம் பெறுவார்கள். ஏனெனில், இதுபோன்ற எந்தவொரு ஏற்பாடும் இல்லை, வேறு எந்த மதமும் அதன் கீழ் எடுக்கப்படாது என்று கூறுகிறது. 


நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், இன்று மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தேசிய குடியுரிமைப் பதிவேடு, இந்தியர்களை குடிமக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கான ஓர் செயல் என்று குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அசாமில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தேசிய குடியுரிமை பட்டியல், இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்படும் என்றும், இதனால் எந்த மதத்தவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.


இதனைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை என்பது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதில் எந்த ஒரு மதமும் குறிவைக்கப்படவில்லை என்றும், எந்த ஒரு மதத்தினரையும் தனிமைப்படுத்தவும் இல்லை என்றும் உள்துறை அமைச்சர் கூறினார். அனைத்து மதத்தினருக்கும் உரிய பாதுகாப்பை மத்திய அரசு வழங்கும் என உறுதிபடத் தெரிவித்தார். மேலும் தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்முறை, நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என்றும், மித் ஷா அறிவித்தார்.


அசாம் மாநிலத்தில் வசிக்கும் இந்தியர்களை கண்டறியவும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நோக்கத்துடனும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, கடந்த 2013 ஆம் ஆண்டு தேசிய குடியுரிமைப் பதிவேட்டை பராமரிக்க தொடங்கியது அம்மாநில அரசு. இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள குடியுரிமை பதிவேட்டின் படி, பதிவு செய்திருந்த 3,30,27,661 பேரில், சுமார் 19 லட்சம் மக்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. இதை தொடர்ந்து, இந்த இறுதி பட்டியலில் இடம்பெறாதவர்கள், குடியுரிமை தீர்ப்பாயத்தில் மனு சமர்ப்பிக்கலாம் என்றும் அப்படியும் தனது குடியுரிமையை நிரூபிக்க இயலாதவர்கள், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தையும் அணுகலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.