இந்திய தலைமை நீதிபதியாக நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்: குடியரசு தலைவர் ஒப்புதல்
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1957 ஆம் ஆண்டில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த நீதிபதி ரமணா 1983 ஆம் ஆண்டில் சட்டப்படிப்பைத் தொடங்கினார்.
இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணாவை (NV Ramana) குடியரசுத் ட்தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி சரத் அரவிந்த் போப்டே (SA Bobde) இந்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். தற்போது இப்பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரமணா ஏப்ரல் 24 ம் தேதி பதவியேற்பார்.
இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதிக்கு, நீதிபதி நத்தாலபதி வெங்கட் ராமன் (நீதிபதி என்.வி.ரமணா) பெயரை சி.ஜே.ஐ போப்டே பரிந்துரைத்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக எள்ள என்.வி.ராமணா பதவிக்காலம் 2022 ஆகஸ்ட் 26 அன்று முடிவடைகிறது.
சில நாட்களுக்கு முன்பு புதிய தலைமை நீதிபதியை நியமிக்கும் பணியை மத்திய அரசு தொடங்கிய நிலையில், தனது பதவிக் காலம் முடிந்த பின் தலைமை நீதிபதியாக நியமிக்க, பரிந்துரைக்குமாறு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மார்ச் 19 அன்று, சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஏப்ரல் 23 ம் தேதி நீதிபதி போப்டே ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு பதிலாக நியமிக்க புதிய தலைமை நீதிபதி (CJI) பெயரை பரிந்துரைக்குமாறு கடிதம் அனுப்பினார்.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1957 ஆம் ஆண்டில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த நீதிபதி ரமணா 1983 ஆம் ஆண்டில் சட்டப்படிப்பைத் தொடங்கினார். ஆந்திராவின் உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் ஆந்திர மாநில நிர்வாக தீர்ப்பாயங்கள் மற்றும் சிவில், குற்றவியல், இந்திய உச்ச நீதிமன்ற செயல்முறைகள், அரசியலமைப்பு, தொழிலாளர், சேவை மற்றும் தேர்தல் விஷயங்கள் ஆகியவற்றில் அவர் பயிற்சி பெற்றவர்.
அரசியலமைப்பு, குற்றவியல், சேவை மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற நீதிபதி ரமணா, வரி வகைகள் (Tax), அரசியலமைப்பு, பிரச்சனை தீர்வு மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றில் புது வித மற்றும் நேர்த்தியான தீர்ப்புகளை எழுதிய பெருமைக்குரியவர்.
ALSO READ | 8 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை