டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால் வாகனங்களை இயக்குவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டத்திற்கு  தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, காற்று மாசு பிரச்சனையை சமாளிக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் காற்று மாசுபாட்டில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் முயற்சியாக அவர்களின் நலன் கருதி வரும் நவம்பர் 12-ம் தேதி (நாளை) வரை அரசு பள்ளி, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டு வர வரும் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி என 5 நாட்களுக்கு ஒருநாள் ஒற்றைப்படை எண் கொண்ட கார்களும், மறுநாள் இரட்டைப் படை எண் கொண்ட கார்களும் இயக்கப்படும் என டெல்லி அரசு வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது. 


இதைக்குறித்து விசாரணை மேற்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியதாவது:- வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்க்கும் திட்டத்திற்கு அனுமது வழங்கபடுகிறது. கடந்த முறை அரசு அதிகாரிகள், இரு சக்கர வாகனங்கள், பெண்கள் என விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களை தவிர்த்து மற்ற யாருக்கும் விலக்கு அளிக்க கூடாது. 


இந்த வாகன கட்டுப்பாடை மக்கள் பின்பற்றா வில்லை என்றால், காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு மற்று வழி குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். வாகன கட்டுப்பாடு காரணமாக காற்று மாசு எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பதை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியது.