Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவின் 21 லோக்சபா தொகுதிகளை வெல்வது யார்?
Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றப்போவது யார் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். ஒடிசாவில் இன்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலின் அனைத்து தொகுதிகளின் எண்ணிக்கையும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி), பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள 147 தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. பிற்பகலில் யாருடைய ஆட்சி அமைக்கப்படும் என்பது தெரியவரும். பிஜேடி மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைக்குமா அல்லது முதல்முறையாக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் கனவு நிறைவேறுமா என்பதே அனைவரின் பார்வையாக உள்ளது.
ஒடிசாவில் மொத்தம் 21 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் பிஜு ஜனதா தளமும் பாஜகவும் தனித்து போட்டியிடுகின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் ஜே.எம்.எம் 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில், நவீன் பட்நாயக்கின் பிஜேடி 21 இடங்களில் 12 இடங்களை வென்றது. பாஜக 8, காங்கிரஸ் 1 என வெற்றி பெற்றிருந்தது. ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தள கட்சியில் முக்கிய தலைவராக இருப்பவர் வி.கே.பாண்டியன். தமிழகத்தைச் சேர்ந்த இவர் ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர். இவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த ஆண்டு நவம்பரில் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 21 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றப்போவது எந்த கட்சி என்பதை தெரிய வரும்.
சற்று முன் வெளியான தகவலின் படி ஒடிசாவின் பிரஜ்ராஜ்நகர் தொகுதியில் பாஜகவின் சுரேஷ் பூஜாரி 1679 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதியிலும் 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதுவரை மொத்தம் 5258 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. ஒடிசாவின் ஜார்சுகுடா தொகுதியில் பிஜு ஜனதா தளத்தின் தீபாலி தாஸ் 867 இடங்களில் முன்னிலை வகிக்கிறார். இங்கு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது, மொத்தம் 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்...டாக்டர் சுபாஷ் சந்திரா பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ