ஒரிசா மாநிலத்தில் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை இன்னுன் நிறைவேற்றப்படாத நிலையில் அதனை நினைவுப்படுத்தும் வகையில் ஒரிசா இளைஞர் 1350 கிமி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரிசா மாநிலத்தின் ரோர்கோளே பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞர் முகின்கான்ட். பிரதமர் மோடியை சந்திக்க தனது கிரமாத்தில் இருந்து நடைபயணத்தை துவங்கிய இவர் சுமார் 1350கிமி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுகுறித்து முகின்கான்ட் தெரிவிக்கையில்... கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் தங்கள் கிராமத்திற்கு வந்து பல வாக்குறுதிகளை அளித்தார். குறிப்பாக இஸ்பட் பொது மருத்துவனையினை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடிக்கு நினைவு படுத்தும் விதமாக இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.


மேலும் குறிப்பிடப்பட்ட மருத்துவமனையில் ஏற்கனவே இருந்த அடிப்படை வசதிகளும் தற்போது குறைந்துக்கொண்டே வருகின்றது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட சிதைக்கப்பட்டு வரும் நிலையில், மேம்பாட்டு திட்டங்கள் எதற்கு என்பதினை வலியுறுத்தியே இந்த பயணத்தை தான் மேற்கொண்டாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


இந்த பயணத்தை தேசியக் கொடியை கையில் ஏந்தி தொடங்கிய முகின்கான்ட்  சுமார் 1350 கிமீ நடந்து பின்னர் ஆக்ரா நெடுஞ்சாலையில் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து உடல் நலம் தேறியதும் தனது பயணத்தை தொடர்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.