கடந்த மே 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இதற்காக மொத்தம் 154 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில்  நீட் தேர்வு நடைபெற்றது. 


நாடு முழுவதும் சுமார் 15.19 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நீட் தேர்வுக்கான விடைகள் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதனை www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். 


விடை திருத்தத்திற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, விடைத்தாள் திருத்ததிற்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு வேளை மாணவர்கள் குறிப்பிட்டுள்ளது போல், விடையில் பிழை இருப்பின் விண்ணப்பக் கட்டணம், அவரது வங்கிக் கணக்கிற்கே திருப்பி செலுத்தப்படும்.