புதுடெல்லி: புதிய கோவிட் மாறுபாட்டான ஓமிக்ரானின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தற்போதைய கோவிட் 19 நிலைமை மற்றும் ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷனை திங்கள்கிழமை சந்திக்கவுள்ளது. கோவிட்-19 நிலைமை மற்றும் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டான ஒமிக்ரானின் தோற்றம் குறித்த தகவல்களை, தேர்தல் ஆணையம் , சுகாதார செயலர் பூஷனிடம் இருந்து பெறலாம் என கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா நேற்று நிருபர்களிடம் இது குறித்து கூறுகையில், அடுத்த வாரம்  உத்திர பிரதேசத்திற்கு சென்று நிலைமையைப் பரிசீலித்த பிறகு, தேவையான முடிவு எடுக்கப்படும் என்றார்.


ALSO READ | ஒமிக்ரான் வைரஸ்: தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு 100% ஆபத்து உறுதி!


கோவிட் -19 இன் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் தேர்தல் பணியை குறைந்தது ஓரிரு மாதங்கள் தாமதப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. 


நீதிபதி சேகர் குமார் யாதவ் பெஞ்ச், ஒரு வழக்கில் மனுதாரரின் ஜாமீன் மனு மீதான விசாரணையில், ​​ஓமிக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மூன்றாவது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியது.


தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வெள்ளிக்கிழமை டேராடூனில் இது குறித்து கூறுகையில், தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் உத்தரபிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளும் ன்றும், நிலைமையை மதிப்பீடு பிறகு நிலைமைக்குத் தேவையான சரியான முடிவு எடுக்கப்படும்" என்றும் கூறினார். தேர்தல் கமிஷன் ஏற்கனவே பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டது.


கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் சட்டமன்றங்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது, அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தில் சட்டசபையின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதை அடுத்து தேர்தல் ஆணையம் (EC) அடுத்த மாதம் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ | ’ஒமிக்ரானை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்’ பிரதமர் மோடி உரை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR