கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டின் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாறுபாடு குறைந்தது 23 நாடுகளுக்குப் பரவியிருப்பதாகவும், மற்ற நாடுகளைப் பாதிக்கும் எல்லா சாத்தியக்கூறுகளும் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

WHO அமைப்பின் ஆறு பிராந்தியங்களில் ஐந்தில் குறைந்தது 23 நாடுகளில் Omicron பரவியுள்ளது என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ( Tedros Adhanom Ghebreyesus) புதன்கிழமை தெரிவித்தார். Omicron மாறுபாடு இப்போது பல நாடுகளுக்கு பரவும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டார்.


தடுப்பூசி இதனை தடுக்குமா!


கொரோனாவின் ஓமிக்ரான் மாறுபாடு உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பல சுகாதார வல்லுநர்கள் Omicron டெல்டா மாறுபாட்டை விட ஆபத்தானது என்று விவரித்துள்ளனர். Omicron காரணமாக, உலகின் பல நாடுகள் தென்னாப்பிரிக்காவிற்கு  பயணம் மேற்கொள்ள தடைகளையும் கட்டுபாடுகளையும் விதித்துள்ளன. கோவிட் இன் இந்த புதிய மாறுபாடு, தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களிடையே கூட வேகமாக பரவுகிறது. இதனால் தொற்றுநோய் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக WHO கூறுகிறது.


ALSO READ | விமானப் பயணிகளுக்கு புதிய பயண வழிகாட்டுதல்கள் அமல்! பயணத்தடை!!


Omicron பற்றி போதிய  தகவல் இல்லை


தென்னாப்பிரிக்காவின் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் (NICD) நிர்வாக இயக்குனர் அட்ரியன் பூரன் இது , "இது டெல்டா மாறுபாட்டை விட ஆபத்தாக இருக்கும் என்று தோன்றவில்லை" என்றார். இது ஒருவேளை நோய் பரவும் வேகத்தின் அடிப்படையில் அது ஆபத்தானதாக இருக்கலாம். ஓமிக்ரானைப் பற்றி அதிகம் தகவல் ஏதும் இல்லை, அது எந்த அளவிற்கு பரவும், தடுப்பூசியால் அதன் பரவலை தடுக்க முடியுமா போன்ற தகவல்கள் ஏதும் இல்லை என அவர் மேலும் கூ.


சவுதி அரேபியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு


ஒமிக்ரான் மாறுபாடு சவுதி அரேபியாவிலும் நுழைந்துள்ளது. ஓமிக்ரான் அறிகுறிகள் உள்ள நபர் சில நாட்களுக்கு முன்பு வட ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Also Read | இந்தியாவில் விரைவில் பூஸ்டர் டோஸ்? SII நிறுவனம் கூறுவது என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR