இந்தியாவில் கோவிட்-19 தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் XBB.1.16 துணை மாறுபாட்டு தொற்று, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வெண்படல அழற்சியின் அபாயத்தை அதிகரிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் WHO தடுப்பூசி பாதுகாப்பு வலை அமைப்பின் உறுப்பினரான விபின் எம். வஷிஷ்ட் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சி, ஏப்ரல் 4-16 க்கு இடையில் உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு குழந்தை மருத்துவமனையின் OPD க்கு சிகிச்சைக்காகச் சென்ற 25 குழந்தைகளை அடிப்படையாகக் கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திர பிரதேசம் பிஜ்னூரில் உள்ள மங்களா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் குழந்தை மருத்துவ ஆலோசகராக உள்ள வசிஷ்தா, "எங்கள் ஆரம்ப கண்டுபிடிப்புகள் வயதான குழந்தைகளை விட இளைய குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதை காட்டுகின்றன" என கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


" தொற்று பாதிக்கபப்ட்டவர்களில் 42.8 சதவீத குழந்தைகளுக்கு கண்களில் நமைச்சல், சீழ் மிக்க வெண்படல அழற்ச்சி மற்றும் கண் இமைகளின் ஒட்டும் தன்மை ஆகியவை உள்ளன," என்று அவர் மேலும் கூறினார். எனினும், குழந்தைகள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.  அனைத்து குழந்தைகளும் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.


மேலும் படிக்க | ’கோடை ஆப்பிள்’ நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?


ட்விட்டரில் கொரோனா தொற்று பரவல் குறித்து விவரித்த வசிஷ்ட், தற்போதைய கோவிட் தொற்று, பாதிக்கபப்ட்டவர்கள் 1-3 நாட்கள் மட்டுமே நீடிக்கும் லேசான காய்ச்சல் நோயை ஏற்படுத்துகிறது என்று கூறினார். வயதான குழந்தைகளில் சுவாச பிரச்சனை அறிகுறிகள் அதிகம் உள்ளன என கூறினார்.


"வயதான குழந்தைகளை விட இளைய குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மிக இளைய குழந்தை 13 நாள் முன்னதாக பிறந்த குழந்தை" என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "வயதான குழந்தைகளை விட ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்று பரவல் அதிகம் உள்ளது என்று அவர் கூறினார்.


மேலும் படிக்க | இந்த 7 விஷயங்கள் செய்தால் போதும்..அடி வயிறு தொப்பை ஐஸ் போல் கரையும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ