அமெரிக்காவை மிரட்டும் புதிய வகை கொரோனா தொற்று... இப்போது இந்தியாவில்!
Omicron XXB.1.5 Variant : அமெரிக்காவில் அதிக கொரோனா தொற்றை ஏற்படுத்திவரும், ஒமிக்ரான் XXB.1.5 கொரோனா தொற்று தற்போது இந்தியாவின் குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
Omicron XXB.1.5 Variant : நியூயார்க்கில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமான ஒமிக்ரான் XXB.1.5 கொரோனா தொற்று வகை தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் XXB.1.5 தொற்று, குஜராத்தில் மாநிலத்தில் தற்போது முதல் முறையாக தென்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா நோய்தொற்று கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நேற்று வெளியிட்ட தரவுகளின்படி, இப்போது அமெரிக்காவில் நாடு முழுவதும் 41% புதிய தொற்றுகள் XBB.1.5 தொற்றால் ஏற்பட்டுள்ளதாக , கடந்த வாரத்தில் பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது
XBB.1.5 என்ற மற்றொரு ஒமிக்ரான் தொற்று மகாராஷ்டிராவில் தென்பட்ட நிலையில், அதன் துணை தொற்றாக கருத்தப்படும் XXB.1.5 தொற்று குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் அருகருகே இருப்பதனால், XXB.1.5 தொற்று தங்களது மாநிலத்தில் பரவிவிடக்கூடாது என்று மகாராஷ்டிரா சுகாதார அதிகாரிகள் மிகவும் கவனமாக செயலாற்றி வருகின்றனர்.
மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசியால் அதிகரிக்கும் மாரடைப்பு ; மக்கள் அச்சம் - என்ன சொல்கிறது அரசு?
இதுகுறித்து மகாராஷ்டிரா சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில்,"தொற்றின் மரபணு தடயங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். மாநிலம் 100% மரபணு வரிசைமுறையை மேற்கொள்கிறது. அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கண்டிப்பாக தெர்மல் ஸ்கிரீனிங்கிற்கு உட்படுத்தப்படுகின்றனர். இவற்றில் தோராயமாக 2 சதவீதத்தினரை தேர்வுசெய்து அவர்களின் மாதிரிகளும் பரிசோதனை செய்யப்படுகின்றன. கொரோனா பாஸிடிவ் ஆக வந்தால், அந்த மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படுகின்றன" என்றார்.
தொற்று நோயியல் நிபுணரான எரிக் ஃபீகல்-டிங் கூறுகையில்," XXB தொற்றானது BQ மற்றும் XBB தொற்றுவகைகளை விட அதிக நோய் எதிர்ப்பை தவிர்க்கக்கூடியது மற்றும் அதிகமாக பரவக்கூடியது. பல மாதிரிகள் XXB.1.5 தொற்றுவகை, மற்ற தொற்றுவகைகளை பரிமாற்ற R மதிப்பு (Transmission R value) மற்றும் தொற்று விகிதத்தில் மிகவும் மோசமாக உள்ளது" என்றார்.
கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் XBB குடும்பம் போன்ற துணை வகைகளின் எழுச்சியானது திருப்புமுனை நோய்த்தொற்றுகள் மற்றும் மறு-தொற்றுநோய்களின் எழுச்சியை விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.
இந்தியாவில் 226 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் கடந்த 24 மணிநேரங்களில் பதிவாகியுள்ளன. மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 4.46 கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சிகிச்சையில் இருக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிர்துத 653 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ