உத்திர பிரதேசத்தில் (UTTAR PRADESH), குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படுவதோடு, புது விதமான தண்டனைகள் மூலம்  மாநிலத்தில் குண்டர்கள் ராஜ்ஜியம் ஒடுக்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோ (Lucknow): உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் (CM Yogi Adityanath) அரசு கடுமையான முடிவுகளை எடுத்து வருகிறது.  இதன் கீழ், பெண்களுக்கு எதிராக குற்றங்களை(Crime against women) செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது போன்ற நபர்களின் போஸ்டர்கள் பொது இடங்களில், சாலை சந்திப்புகளில் வைக்கப்படும் என்றும், மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை பெண் காவல் துறையினரால் நிறைவேற்றப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.


இந்த நடவடிக்கையின் மிகவும் சிறப்பு  விஷயம் என்னவென்றால், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு, பெண் காவல் பணியாளர்களை வைத்தே தண்டனையை நிறைவேற்ற வைப்பது என்பது தான்.


பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


மேலும் படிக்க | நடக்காத விபத்திற்கு ₹1.07 லட்சம் க்ளைம்.. சென்னை நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..!!!


மக்கள், தைரியமாக முன்வந்து, பெண்களுக்கு எதிராக தவறிழைப்பவர்களின் பெயர்கள், விபரங்கள் குறித்து  அரசுக்கு தகவல் அளிக்குமாறு,  முதல்வர் யோகி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான வன்முறையின் போது யோகி அரசு இதேபோன்ற நடவடிக்கை எடுத்தது நினைவில் இருக்கலாம். அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்திய நபர்களின் சுவரொட்டிகளை தெருக்களில் அரசாங்கம் வைத்திருந்தது.


மேலும் படிக்க | பிரிவினையில் தொலைந்தவரின் கண்ணீர் வாழ்வு....WhatsApp அழைப்பால் இணைந்தது உறவு..!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR