ஜெகன் ரெட்டியின் உத்தரவின் பேரில், ஜே.சி.பி.க்கள் சந்திரபாபு நாயுடு கட்டிய கட்டிடத்தை இடிக்கத் தொடங்குகின்றனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் 5 கோடி ரூபாய் செலவில் மக்கள் குறைதீர்ப்புக்காக அமராவதியில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டடம் புல்டோசர்களால் இடித்துத் தரைமட்டமாக்கும் பணி நடைபெற்றது. ஆறு புல்டோசர்கள் மூலம் கட்டடம் சுக்கு நூறாக இடித்துத் தள்ளப்பட்டது. இதற்கு தெலுங்குதேசம் கட்சியினர் பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததால் இன்று அதிகாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்றன.


இரண்டு நாட்களாக இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்டடத்தில் இருந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்த கட்டடம் அருகே தான் சந்திரபாபு நாயுடுவின் வீடும் அமைந்துள்ளது. சந்திரபாபு நாயுடு விடுமுறைக்காக ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நேரத்தில் கட்டடத்தை இடிக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.


ஆறுகள் பாதுகாப்பு சட்டத்தின்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்த விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடம் என்பதால் இடிக்க உத்தரவிடப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து தமது இல்லத்தையும் அரசு குறிவைத்திருப்பதால் குறுகிய கால அவகாசத்தில் காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.



2019 ஆம் ஆண்டு முன்னதாக இங்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து முந்தைய மாநில அரசாங்கத்தின் பல முடிவுகளை ஜெகன் மாற்றியமைத்துள்ள நிலையில், TDP மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து TDP MLC புத்த வெங்கண்ணா கூறுகையில்;  "முதலமைச்சர் இங்கு பழிவாங்கும் அரசியலைத் தொடர்கிறார் என்பது தெளிவாகிறது. TDP அரசாங்கத்தால் கட்டப்பட்டதால் தான் அவர் ஏன் ஒரு கட்டிடத்தை இடிக்க வேண்டும்? அதற்கு பதிலாக, அவர் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், அவர் சில வசதிகளாக மாற்ற முடியும் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், '' என்று தெரிவித்துள்ளார்.