இந்திய விமானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... தரையிறக்கப்பட்டது எங்கு தெரியுமா?
Flight Bomb Threat: மாஸ்கோவில் இருந்து கோவா வந்த விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அந்த விமானம் திருப்பிடவிடப்பட்டது.
Flight Bomb Threat: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 240 பயணிகளுடன் கோவா நோக்கிச் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டலை தொடர்ந்து, இன்று அதிகாலை விமானம் உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பிவிடப்பட்டது.
அசூர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் விமானம் (AZV2463)இந்திய வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பு திருப்பிவிடப்பட்டது. தெற்கு கோவாவில் உள்ள டபோலிம் விமான நிலையத்தில் அதிகாலை 4.15 மணிக்கு விமானம் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.
"விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்ட டபோலிம் விமான நிலைய இயக்குநருக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு மின்னஞ்சல் வந்ததை அடுத்து விமானம் திசைதிருப்பப்பட்டது" என்று அந்த அதிகாரி கூறினார்.
மேலும் படிக்க | Republic Day 2023: குடியரசு தின அணிவகுப்பை காண ஆன்லைன் புக்கிங் செய்வது எப்படி
ரஷ்யாவின் பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்குச் சென்ற அசூர் ஏர் விமானத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. 2 கைக்குழந்தைகள் மற்றும் 7 பணியாளர்கள் உட்பட மொத்தம் 238 பயணிகள் விமானத்தில் இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இரண்டு வாரத்திற்கு முன்பு, இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாஸ்கோவில் இருந்து கோவாவுக்குச் சென்ற விமானம் குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தது. தற்போது, மீண்டும் அதே விமானத்திற்கு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Kerala Lottery Result: கேரளா லாட்டரி முடிவுகள், முதல் பரிசு ரூ.80 லட்சம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ