படிப்படியாக குறையும் தக்காளி விலை.. செப்டம்பரில் ஆழ வைக்க ரெடியாக்கும் வெங்காயம்

Onion Price Update: கடந்த சில மாதங்களாக, தக்காளி சாமானிய மக்களின் சமையலறை பட்ஜெட்டை உலுக்கி வந்தது. தற்போது தக்காளியின் விலை குறையத் தொடங்கியுள்ளதால், மற்றொரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது, ஆனால் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தில் இருந்து சாமானியர்களுக்கு நிம்மதி கிடைப்பதாகத் தெரியவில்லை. அதன்படி கடந்த சில மாதங்களாக கடும் விலை உயர்வால் தொல்லை கொடுத்து வந்த தக்காளி தற்போது சற்று விலை குறைந்து நிம்மதி தர ஆரம்பித்திருந்த நிலையில், இப்போது மற்றொரு புதிய பிரச்சனை தலை தூக்கியுள்ளது. ஆம், தக்காளி விலை குறைந்து வரும் நிலையில், தற்போது வெங்காயம் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செப்டம்பரில் வெங்காயத்தின் விலை இரட்டிப்பாகும்:
தற்போது சில்லரை சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 முதல் 35 வரை விற்பனையாகி வருகின்றது, ஆனால் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு இந்திய வீட்டிலும் சமையலறையில் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், வெங்காயத்தின் விலை உயர்வால், மீண்டும் சமையலறை பட்ஜெட் எக்குத்தப்பாகலாம். ஏனெனில் செப்டம்பர் மாதத்தில் வெங்காயத்தின் விலை வேகமாக உயரும் என்று தற்போது கூறப்பட்டு வருகின்றது. அதன்படி சில்லரை சந்தையில் வெங்காயம் விலை இருமடங்காக உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
விலை உயர்வு எவ்வளவு எட்டலாம்?
CRISIL Market Intelligence and Analytics இன் அறிக்கையின்படி, செப்டம்பர் மாதத்தில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 60-70 ரூபாயை எட்டும். அதாவது இனி வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை இப்போது இருப்பதை விட இரட்டிப்பாக விற்பனை செய்யப்படும் என்று கூறப்பட்டு வருகின்றது. தற்போது மார்க்கெட்டில் கிலோ ரூ.30-35க்கு விற்பனை செய்யப்படும் வெங்காயம், வரும் நாட்களில் அதே வெங்காயத்துக்கு கிலோ ரூ.60-70க்கு விலை கொடுப்பது போல் நேரிடலாம்.
இது மிகுந்த நிம்மதியை அளிக்கும்:
இருப்பினும், இதனிடையே நிம்மதியான விஷயம் என்னவென்றால், வெங்காயத்தின் விலை பல மாதங்களுக்கு தக்காளியைப் போல தொந்தரவு செய்யப் போவதில்லை. கிரிசில் அறிக்கையின்படி, ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து, வெங்காயத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது, இது செப்டம்பர் மாதத்தில் அதிக அளவை எட்டும். அதன்பிறகு, காரீஃப் பயிர்களின் வரத்து அக்டோபர் மாதத்தில் தொடங்கும், இதன் காரணமாக வெங்காயத்தின் விலை மீண்டும் குறையத் தொடங்கும். இதனுடன், வெங்காயத்தின் விலை 2020 இல் காணப்பட்ட உயர் மட்டத்தை விட குறைவாகவே இருக்கும் என்றும் கிரிசில் தகவல் அளித்துள்ளது.
பல நிலைகளில் அரசு முன்கூட்டிய ஏற்பாடுகள்:
இதற்கிடையில், வெங்காயத்தின் விலை உயரும் என்ற அச்சத்தின் மத்தியில் அரசாங்கம் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த வாரம் முதலே வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது. உள்நாட்டு சந்தையில் தேவையை பூர்த்தி செய்யவும், விலையை கட்டுப்படுத்தவும் வெங்காயம் போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்ய, வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்துள்ளது, இது டிசம்பர் 31, 2023 வரை அமலில் இருக்கும். அதற்கு முன் வெங்காயத்தின் பாதுகாப்பான இருப்பு வரம்பை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதேபோல் தக்காளியைப் போலவே, கூட்டுறவு நிறுவனங்களும் சாமானிய மக்களுக்கு வெங்காயத்தை மானிய விலையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ