புதுடெல்லி: இந்த தீபாவளிக்குள் வெங்காயத்தின் விலைகள் (Onion Prices) கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் வெங்காயத்தின் தரமும் மோசமடைய வாய்ப்புள்ளது. கிலோவுக்கு 20 ரூபாயாக விற்கப்பட்டு வந்த வெங்காயம் இப்போது கிலோ 100 ரூபாய் என்ற விலையை எட்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெங்காயத்தின் (Onion) விலை உயர்ந்து, தரம் குறைந்திருந்தாலும், மக்கள் தொடர்ந்து வெங்காயத்தை வாங்கி வருவதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. வெங்காயத்தின் விலை வரும் நாட்களில் ஒரு கிலோ ரூ .125 என்ற அளவிற்கு உயர வாய்ப்புள்ளது.


விற்பனையாளர்களின் கூற்றுப்படி, வெங்காய சப்ளையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால், விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மேலும், மழை காரணமாக வெங்காய பயிர்கள் அழிக்கப்பட்டன. எனவே சந்தையில் புதிய வெங்காயம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


அதிக வெங்காய சாகுபடியைக் கொண்ட நாசிக் (Nashik) மாவட்டம், மோசமான வானிலை மற்றும் மழையால் ஏராளமான சேதங்களை சந்தித்தது.


கடந்த வாரம் தான், வெங்காயம் ஒரு கிலோ ரூ .30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது ரூ .70-80 கிலோவுக்கு கிடைக்கிறது.


மும்பையின் சாண்டா குரூஸ் பகுதியில், தினமும் ஒரு லாரி வெங்காயத்தை விற்பனை செய்யும் வெங்காய மொத்த விற்பனையாளர்கள், தற்போது நான்கு குவிண்டால் வெங்காயங்களை விற்பனை செய்கின்றனர்.


மும்பையில் வெங்காய சப்ளை பெரும்பாலும் நவி மும்பையில் உள்ள ஏபிஎம்சி சந்தையில் இருந்து வருகிறது. அங்கு வியாழக்கிழமை 29 வெங்காய லாரிகள் மற்றும் 47 டெம்போக்கள் மட்டுமே வந்தன. சாதாரண நாட்களில், இந்த எண்ணிக்கை 70-80 லாரிகளாக இருக்கும்.


இன்று, நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தை என்று கூறப்படும் லாசல்கான், வெங்காயத்தை குவிண்டாலுக்கு ரூ .7000 க்கு விற்கிறது. தரம் சற்று குறைவாக உள்ள வெங்காயம் குவிண்டாலுக்கு ரூ .6250 மற்றும் மிகவும் மோசமான தரம் கொண்ட வெங்காயம் குவிண்டாலுக்கு ரூ .1500 என விற்கப்படுகிறது.


ALSO READ: உயரப்போகிறது வெங்காயத்தின் விலை, தீபாவளிக்குள் ஒரு கிலோ இவ்வளவு ஆகிவிடும்


கடந்த வார வெங்காய விலை


திங்களன்று, சிறந்த தரமான வெங்காயத்தின் விலை குவிண்டாலுக்கு 4552 ரூபாயாக்கும், நல்ல வெங்காயம் 4100 ரூபாயாக்கும் தரமற்ற வெங்காயம் 805 ரூபாயாக்கும் விற்கப்பட்டன.


செவ்வாய்க்கிழமை, மூன்று விதமான வெங்காயங்களின் விலைகளும் ரூ .4700, ரூ. 4100, ரூ .1100 என நிர்ணயிக்கப்பட்டது.


புதன்கிழமை, இவற்றின் விலை குவிண்டாலுக்கு ரூ .4800, ரூ .4300, ரூ .1452 என இருந்தன.


இந்த வாரம் வெங்காயம் விலை


தரத்தின் படி மூன்று வகையான வெங்காயம் திங்களன்று ரூ .7082, ரூ .6400, ரூ .1200 என இருந்தது.


இவை செவ்வாயன்று ரூ.7812, ரூ .7100, ரூ .1901 என விற்கப்பட்டன.


புதன்கிழமை, மூன்று வகையான வெங்காயத் தரம் ரூ .7102, ரூ 5801, ரூ .1560 என நிர்ணயிக்கப்பட்டது.


வியாழக்கிழமை சிறந்த தரமான வெங்காயத்தின் விலை 7050 ரூபாயாகவும், நல்ல வெங்காயம் 6250 ரூபாயாகவும் தரமற்றவை 1500 ரூபாயாகவும் உள்ளன.


ALSO READ: தொடரும் கனமழை.. 100 ரூபாய் தாண்டிய ஒரு கிலோ வெங்காயத்தின் விலை!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR