திருப்பதி: ’அப்ரேஷன் சிறுத்தை’ வனத்துறையின் தேடுதலில் சிக்கிய 6வது சிறுத்தை
திருப்பதி நடைபாதையில் பக்தர்களை தொடர்ந்து சிறுத்தைகள் தாக்கி வந்த நிலையில், ஆப்ரேஷன் சிறுத்தை திட்டத்தை வனத்துறை அங்கு தொடங்கியுள்ளது. இதில் இதுவரை 5 சிறுத்தைகள் பிடிப்பட்டிருக்கும் நிலையில் இப்போது 6வது சிறுத்தை சிக்கியுள்ளது.
திருப்பதி சிறுத்தை அச்சுறுத்தல்
திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைபயணமாக செல்லும் பக்தர்களை சிறுத்தைகள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். இது பக்தர்களுக்கும் தேவஸ்தானத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் 6 வயது சிறுமி லக்ஷிதா சிறுத்தையின் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக சிறுமியின் மீது தாக்குதல் நடத்திய சிறுத்தையைப் பிடிக்க மாநில அரசு மற்றும் வனத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையொட்டி திருமலைக்கு செல்லும் நடைபாதை பகுதிகளில் சிறுத்தைகளைப் பிடிக்கும் கூண்டுகள் வைத்து சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க | திருப்பதி: பாதயாத்திரை சென்ற சிறுவனை தாக்கிய சிறுத்தை
ஆப்ரேஷன் சிறுத்தை
அதற்காக ஆப்ரேஷன் சிறுத்தை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த நடவடிக்கையில் 5 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை பிடிக்கப்பட்ட சிறுத்தைகளின் டிஎன்ஏக்களை ஆய்வு செய்ததில் சிறுமியை தாக்கிய சிறுத்தைக்கும், பிடிப்பட்ட சிறுத்தைகளுக்கும் தொடர்பில்லை என தெரியவந்துள்ளது. இதனால் அந்த சிறுத்தைகள் மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சிறுத்தையை பிடிக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நடைபாதைகளுக்கு அருகாமையில் 30 முதல் 50 மீட்டர் தொலைவில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
வன ஆர்வலர்கள் எதிர்ப்பு
சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து பிடிப்பதற்கு வன ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவற்றை பிடிக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வனத்துறை, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும், பிடிக்கப்பட்ட சிறுத்தைகளுக்கு எந்தவித துன்புறுத்தலும் கொடுக்கப்படாமல் மீண்டும் வனப்பகுதிகளுக்குள் விடப்படுகின்றன என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இதுவரை 2 சிறுத்தைகளின் டிஎன்ஏ முடிவுகள் கிடைக்கப்பெற்று அவை சிறுமியின் தாக்குதலில் தொடர்பில்லை என தெரிந்தவுடன் மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளதாகவும், 2 சிறுத்தைகளின் டிஎன்ஏ முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் வனத்துறை கூறியுள்ளது.
திருப்பதியில் குவியும் பக்தர்கள்
திருப்பதி திருமலைக்கு நாள்தோறும் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்களின் வசதிக்காக திருமலை தேவஸ்தானம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக சிறுத்தை தாக்குதல் செய்தி எதிரொலியால் நடைபயணம் செய்ய பக்தர்கள் விரும்புவதில்லை. இதனை கருத்தில் கொண்டு தேவஸ்தானம், சிறுத்தை நடமாட்டத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
மேலும்படிக்க | திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ