பயங்கரவாதத்துக்கு எதிராக அரசு எடுக்கும் முடிவுக்கு காங்கிரஸ் ஆதரவு!
பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கப்படும் என டெல்லியில் நடைப்பெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது!
பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கப்படும் என டெல்லியில் நடைப்பெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது!
புல்வாமா பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தலைமையில் புதுடெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைப்பெற்றது. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு அனைத்துகட்சிகளும் முழு ஆதரவு அளிக்கும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவுவேற்றப்பட்டது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தில் மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 40 வீரர்கள் பலியாகினர். பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி அரசு முதன் முதலாக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்ட அழைப்பு விடுத்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முறையே.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.
நாட்டின் எல்லைப்பகுதிகளில் காணப்படும் அனைத்து விதமான பயங்கரவாதங்களுக்கும், பயங்கரவாதங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
கடந்த 30 ஆண்டுகளாக இந்திய எல்லைப்பகுதிகளில் அண்டை நாடுகளினால் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியா தொடர்ந்து பல பயங்கரவாத அச்சுறுத்தல்களை சந்தித்து தான் வருகிறது. ஒட்டுமொத்த தேசமும் இந்த அச்சுறுத்தல்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என சிந்தித்து வருகிறது. இந்நிலையில் தேசத்தை காப்பாற்ற பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
என குறிப்பிடப்பட்டுள்ளது.