சிமி இயக்கத்திற்கான தடையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


1977 ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகரில் சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு மக்களுடைய மனதை மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதாகவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறி பல்வேறு கட்டங்களில் மத்திய அரசு தடை விதித்தது.


மேலும் 2014ம் ஆண்டில் பெங்களூரு சின்னசாமி மைதானம், அதே ஆண்டில் போபாலில் சிறை உடைப்பு, 2017ம் ஆண்டில் பீகார் மாநிலம் கயாவில் நடந்த சம்பங்கள் அனைத்திலும் இந்த இயக்கத்தைசேர்ந்த சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து 2014 ம் ஆண்டில் 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 


இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு சிமி அமைப்பிற்கான தடையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.