50 ஆண்டுகளாக 1000-க்கும் மேற்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது: ரஞ்சன் கோகோய்
கடந்த 50 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் 1000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்!!
கடந்த 50 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் 1000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார்!!
இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன, அதே நேரத்தில் இரண்டு லட்சம் பிளஸ் வழக்குகள் 25 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில் நடைபெற்ற போது நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய கோகோய், அஸ்ஸாமில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் அகற்றுமாறு கவ்ஹாதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (செயல்) அருப்குமார் கோஸ்வாமிக்கு அறிவுறுத்தினார்.
மேலும், இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பதிவான வழக்குகளில், 1000 வழக்குகள் 50 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மேலும் 25 ஆண்டுகளாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்படி நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை அந்தந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் விரைவில் முடிக்க வேண்டும். குறிப்பாக 90 லட்சத்துக்கும் மேலாக சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவற்றில் 20 லட்சத்துக்கும் மேல் இன்னும் சம்மன்கூட அனுப்பப்படவில்லை. இவை அனைத்தையும் நீதிபதிகள் கவனத்தில் கொண்டு விரைந்து முடிக்க வேண்டும். CJI மேலும் கூறுகையில், நிலுவையில் உள்ள சுமார் 90 லட்சம் சிவில் வழக்குகளில், 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சம்மன் இன்னும் வழங்கப்படாத ஒரு கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.