டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையை எட்டிய நிலையில் முதலமைச்சர் வெளிநாடு சென்றது குறித்து சர்ச்சை....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காற்றின் தரக்குறியீடு அளவு 50 வரை இருந்தால் நன்று எனவும், 100 வரை இருந்தால் திருப்திகரமானது எனவும், 200 வரை இருந்தால் மிதமானது எனவும், 300 வரை இருந்தால் மோசம் எனவும், 400 வரை இருந்தால் மிகமோசம் எனவும், 401-க்கு மேல் இருந்தால் கடுமையானது எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. கனஅளவு பிஎம் 2.5 மற்றும் பிஎம்10 என குறிக்கப்படும் மிகநுண்ணிய துகள்கள் சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று ரத்தத்தில் கலந்துவிடும் நிலையை மோசம், மிகமோசம் என்ற அளவுகள் குறிக்கின்றன.


இந்நிலையில், டெல்லியின் காற்று மாசு மிகவும் மோசம் என்ற நிலையை எட்டியுள்ள நிலையில் முதலமைச்சர் கெஜ்ரிவால் தமது குடும்பத்தினருடன் துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மூன்று நாட்களுக்கு கனரக வாகனங்கள் டெல்லி நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றன.



இன்றுடன் தடை முடிவடைய உள்ள நிலையில் இது மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தீபாவளிப் பட்டாசுகளையடுத்து புகை மூட்டம் மற்றும் காற்றின் மாசு பல மடங்கு உயர்ந்துள்ளது.