உ.பி: சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவான `பத்மாவத்' படம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் ஒரு தியேட்டர் சூறையாடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜன.,24 (வியாழக்கிழமை) லீலா பன்சாலி இயக்கிய பத்மாவத் திரைப்படம் வெளியாகிறது.
இத்திரை படம் வெளியாவதை தொடர்ந்து கர்னி சேனா அமைப்பினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தியேட்டரை முகம் தெரியாத வன்முறை கும்பல் திரையரங்கின் டிக்கெட் கவுண்டர் பகுதியை தாக்கினர். 


முகம் தெரியாத நபர்கள் திரையரங்கின் டிக்கெட் கவுன்டர்களில் உள்ள கம்ப்யூட்டர் மற்றும் கண்ணாடி அறைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.