தீபிகா படுகோண், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகோயோர் நடிப்பில் உருவான திரைப்படம் "பத்மாவதி". இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1-ந்தேதி திரைக்கு வரும் என தெரிவித்திருந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு வந்த நிலையில் உள்ளது. இந்நிலையில், ‘பத்மாவதி’ திரைபடத்தின் தயாரிப்பு நிறுவனமான Viacom18 Motion Pictures, படத்தை வெளியிடும் தேதியை ஒத்திவைத்துள்ளதாகவும்,  "தானாக முன்வந்து" இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவித்து உள்ளது. 


மேலும், இந்நிறுவனம் சட்ட விதிகளுக்கு மதிப்பளிப்பதாகவும், விரைவில் திரைப்படம் வெளியிடும் தேதியை அறிவிப்பதாகவும் கூறினார்.