தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அழுத்தத்தில் உள்ளது பாக்.,
தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் பாகிஸ்தான் உள்ளதாக, ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்!
தீவிரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் பாகிஸ்தான் உள்ளதாக, ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்!
டெல்லி: அடுத்த நான்கு மாதங்களுக்கு நாடு அதன் சாம்பல் பட்டியலில் நீடிக்கும் என்று பாரிஸை தளமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) அறிவித்ததை அடுத்து பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று இந்திய ராணுவ தலைமை ஜெனரல் பிபின் ராவத் சனிக்கிழமை தெரிவித்தார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியைத் தடுப்பதற்கான கொள்கைகளை வகுக்க, 'G-7' அமைப்பை சேர்ந்த நாடுகளால், FATF எனப்படும். நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு, 1989-ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் விஷயத்தில் பாகிஸ்தானை அடுத்த ஆண்டு, பிப்ரவரி வரை, 'கிரே' பட்டியலில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கறுப்பு பட்டியலில் சேர்ப்போம் எனவும் பாகிஸ்தானிற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத்; பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எப்ஏடிஎப் உத்தரவை எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுப்பது என்பது அந்நாட்டின் நடவடிக்கைகளில் தெரியும். எப்ஏடிஎப் உத்தரவுகளை பாகிஸ்தான் பின்பற்ற வேண்டும் எனவும் அமைதியை நிலை நிறுத்த வேண்டும் என்பது நமது எண்ணம். தொடர்ந்து, 'கிரே' பட்டியலில் இருப்பது எந்த நாட்டிற்கும் பின்னடைவு'' என தெரிவித்தார்.