பாகிஸ்தான் சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறும் நிதியை பயங்கரவாதிகளுக்கு பயன்படுத்துகிறது என்று இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா சார்பாக ஏனாம் காம்பீர் ஐ.நா.,வில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  சர்வதேச அமைப்புகளிடம் கோடிக்கணக்கான டாலர் அளவுக்கு நிதியுதவி பெறும் பாகிஸ்தான் அவற்றில் பெரும்பாலானவற்றை பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், நிதியுதவி மற்றும் ஆதரவு அளிக்கவுமே பயன்படுத்துகிறது. அவர்களை அண்டை நாடுகளில் வன்முறையை தூண்டி ஊக்குவிக்கிறது.


உலகப்புகழ்பெற்ற பழமை வாய்ந்த டெக்சிலா கல்வி நிலையத்தை, தற்போது பயங்கரவாதிகளை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. இங்கு சர்வதேச அளவிலான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் வெளிப்படையாக பணம் சேகரிக்கின்றனர். இதன் மூலம் சர்வதேச விதிகளை பாகிஸ்தான் மீறுகிறது. 


பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானால், இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 


உலகின் மிகப்பெரிய மனித உரிமை மீறல் பயங்கரவாதமே ஆகும். இதனை கொள்கையாக பயன்படுத்துவது போர்க்குற்றமாக கருதப்பட வேண்டும். பாகிஸ்தானில் மசூத் அசார், ரெஹ்மான் லக்வி ஆகியோர் சுதந்திரமாக உலாவுகின்றனர். வெளிப்படையாக பயங்கரவாதத்தை தூண்டுகின்றனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.