ஜெய்பூர்: பயங்கரவாதத்தை தடுக்க பாக்கிஸ்தான்., இந்தியாவின் உதவியை நாடலாம் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் மாநிலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாவது... "ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இவ்விவகாரம் குறித்து எந்த விவாதமும் தேவையில்லை. பிரச்னையெல்லாம் பயங்கரவாதம் மட்டும் தான், அதுகுறித்துதான் பாகிஸ்தான் பேச வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


மேலும்., ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அமெரிக்காவின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. ஏன் அதுபோல் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா உதவ கூடாது. பாக்கிஸ்தானை இந்தியா ஒருபோதும் தனியாக நினைத்ததில்லை. இதனை, அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன். 


நமது நாட்டில் பயங்கரவாதம் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது என நான் கூற விரும்பவில்லை. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் நாட்டில் பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நிகழவில்லை என உறுதியாக கூற இயலும்.


காஷ்மீர் மாநிலத்துக்குள் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. அங்கும் தற்போது நிலைமை மேம்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. நமது நாடும், நாட்டின் எல்லைகளும் பாதுகாப்பாக உள்ளன. எதிர்வரும் ஆண்டுகளில், நக்சல் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.