பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய போர் விமானங்கள் இரண்னை சுட்டு வீழ்த்தியதாக பாக்கிஸ்தான் இராணுவம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளையும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.


மேலும் இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் ஒரு போர் விமானம் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்த இந்திய போர் விமானத்தில் வந்த இரு விமானிகள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.



பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில் கைதான மற்றொரு இந்திய விமானி தன்னுடைய பெயர் மற்றும் விமானப்படையில் தனது பணி அடையாள எண் ஆகியவற்றை அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.




அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "எனது பெயர் அபினந்தன். நான் விமானப்படை விங் கமாண்டர் அதிகாரி. என்னுடைய பணி அடையாள (Service No) எண்: 27 981" என குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த வீடியோ சித்தரிகப்பட்டது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,..