சர்வதேச பொருளாதார வளர்ச் சிக்கு தடையாக உள்ள தீவிரவாதத்தின் தாயகமாக பாகிஸ்தான் விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார். தீவிரவாதிகளுக்கு நிதி சென்றடைவதைத் தடுக்க சர்வதேச அளவில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மற்றும் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆயுதங்கள், பயிற்சி, அரசியல் ஆதரவு கிடைப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்றும் மோடி கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவா தலைநகர் பானாஜியில் பிரிக்ஸ் நாடுகளின் 2 நாள் மாநாடு தொடங்கியது. மாநாடையொட்டி கோவாவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநாட்டில் பிரிக்ஸ் மற்றும் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய வங்கக் கடல் பகுதியில் பல்துறை தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான 'பிம்ஸ்டெக்' அமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.


இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் தெமர், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்றனர்.


நாட்டின் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி என அனைத்துக்குமே அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை ஏற்றுக் கொண்ட நாடு பயங்கரவாதிகளின் தாயகமாக இந்தியாவின் அண்டை நாடு பாகிஸ்தான் விளங்கி வருகிறது. உலகத்தில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் ஏதாவது ஒருவகையில் இவர்களுடன் தொடர்பில் உள்ளனர். அந்த நாடு பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது மட்டுமல்லாது அரசியல் லாபங்களுக்காக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதில் தவறில்லை என்ற மனநிலையையும் ஏற்றுக் கொண்டுள்ளது. 


பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இங்கு கூடியுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மோடி தெரிவித்துளார். பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் ஒருமித்து குரலெழுப்ப வேண்டும். பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களை தண்டிக்க வேண்டும்.


பிரிக்ஸ் நாடுகளிடையிலான வர்த்தகத்தை நாம் அதிகரிக்க வேண்டும். மற்றும் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி இதற்காக முக்கியப் பங்காற்ற வேண்டும் என மோடி கூறினார். அண்டை நாடான பாகிஸ்தான் தூண்டிவரும் பயங்கரவாதம் குறித்து பிரிக்ஸ் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையிலும் மோடி பேசினார்.