பாகிஸ்தான் இந்தியாவுடன் நட்பு நாடாக வேண்டும் என்றால் முதலில் மதசார்பற்ற நாடாக வேண்டும் என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயங்கரவாதம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது. பாகிஸ்தான் பல்வேறு முறை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும் இந்தியா அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் மோடியுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். இந்தியாவுடன் அமைதியான உறவை மேற்கொள்ளவே பாகிஸ்தான் விரும்புவதாகவும், இம்ரான்கான் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இம்ரான் கான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


புனேவில் உள்ள ராணுவ அகடாமியில் பேசிய பிபின் ராவத், “அவர்கள் (பாகிஸ்தான்) இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டுமென்றால், முதலில் பாகிஸ்தானை மதசார்பற்ற நாடாக கட்டமைக்க வேண்டும். பாகிஸ்தான் உள்நாட்டு நிலவரத்தை முதலில் பார்க்க வேண்டும். பேச்சுவார்த்தைக்காக இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால், தாங்கள் இரண்டு அடி எடுத்து வைப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது என சுட்டிக்காட்டினார்.


ஆனால், அவர்கள் எடுத்து வைக்கும் முதல் அடி நேர்மறையானதாக இருக்க வேண்டும் எனவும், அதன் தாக்கம் எப்படியிருக்கிறது எனவும் தாங்கள் உணர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதுவரை, தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒருங்கே நடைபெறாது என்ற கொள்கையில் இந்திய தேசம் தெளிவாக இருப்பதாகக் கூறியுள்ளார்.